இயற்கை வாழ்வு அன்று வாழ்ந்த மனிதனே ..
இயற்கைக்கு எதிராய் இன்று இயன்றவரை சதி செய்வதேன் ?
இலை தழை கட்டி வாழ்ந்த மனிதனிடம் இருந்த இயற்கை ஆர்வம் ..
இயந்திரங்களுடன் இயந்திரமாய் வாழும் உனக்கு இன்று இல்லாது போனதேன் ?
இமயமலையைப்பெற்று உலகில் உயர்ந்து நிற்கும் மனிதனே ..
இயன்றவரை மலைகளின் செல்வங்களை இன்று சீரழிப்பதேன் ?
இந்நாட்டின் வற்றாத ஜீவ நதிகள் இன்று ..
இறந்த சடலங்களை சுமக்கவும் இருந்தும் இல்லாதவர்களாகிய நமது கழிவுகளை சுமக்கும் சரக்கு ரெயிலகளாய் மாறிப்போனதேன் ?
இயற்கை அன்னையின் கொடைகளான குளங்களும் குட்டைகளும் இன்று ...
இறைச்சிக்கழிவுகளும் இறந்த உயரினங்களின் உடல்களும்
இறைந்து கிடக்கும் காட்சிக்கூட கூடங்களாய் மாறிப்போனதேன் ?
இறைவனது பெயர்கொண்ட கூவாகம் ஆறும் இன்று ..
இயற்கையினை சற்றும் சிந்தியாத மாநகர மக்களின் செயல்களால் கழிவுக்கால்வாயாக மாறிப்போனதேன் ?
இதோடு அடையாறும் பக்கிங்காம் கால்வாயும் கழிவுக்கால்வாயாக கூவாகத்தின் மறு பதிப்பாய் மாறியதேன்?
இயன்றவரை இன்று குளங்களும் குட்டைகளும் ..
இரக்கமற்றவர்களின் செயல்களால் வீட்டுமனைகளாய் தொழிற்கூடங்களாய் மாறியதேன் ?
இஞ்சி பூண்டு மிளகு கத்தரி வெண்டை தக்காளி என விளைந்த நிலங்கள் இன்று ..
இன்பாக்ஸ் டாஸ்க் மெயில் டார்கெட் ஷிப்மெண்ட் என பணம் விளையும் கட்டிடங்களாய் மாறியதேன்?
இன்றைய விவசாயிகள் மழை பொய்த்து காலநிலை மாறி பயிர்செய்ய வகையறியாது ...
இரசாயன மயானங்களாய் மாறிய விளைநிலங்கோளோடு இன்று ...
இரசம் வைத்தும் உண்ண வழியின்றி எலிக்கறியும் பூனைக்றியும் அவனது பசியாற்றி சிலசமயம் உயிரையும் போக்கும் நிலைக்கு வந்ததேன்?
இந்தக்கனிமப்பூமி அள்ள அள்ள குறையாதது இன்று...
கொள்கையற்ற கொள்ளையர்களிடமும் மனிதத்தன்மையற்ற மடையர்களிடமும் அதன் மூலம் அரசியல் நடத்தும் கயவர்களிடமும் பாழ்பட்டதேனோ?
இலட்சுமி பாட்டி நிலவில் வடை சுட்ட காலத்தில் எடை இல்லாவிட்டாலும் தடை இல்லாது நிலவில் கால்வைத்த மனிதகுலம் இன்று ..
இயந்திர வாழ்க்கையின் எச்சமாய் உருவான ஓசோன் துளையினை அடைப்பதேன்றோ?
இப்புவியினை கண்டதுண்டமாக்கி காலனிகளாய் ஆண்ட ஐரோப்பா தேசம் இன்று..
இலகு பனியில் உறைந்து காட்சி பொருளாகிக்கொண்டிருக்கும் நிலை வந்ததேனோ?
இந்தியத்துணைக்கண்டத்தருகில் இறுமாப்பாய் இருந்த மாலத்தீவு அழியும் நிலைக்கு வந்ததேனோ?
இமயமலை உருகி இடுப்பளவு நீரில் மனிதன் தத்தளிக்கும் நிலை வரவும் வேண்டுமோ?
இதயமும் கனக்கிறதே மாயர்களின் கூற்று உண்மையாகிவிடுமோ என்று...
இந்த புவியின் இறுதி வருடம் இதுதானோ என கலங்கி !
இளைஞனே ...
கலங்கி கலங்கி கரைந்து விடாதே !
வருந்தி வருந்தி விரக்தியடைந்து விடாதே!
அழுது அழுது அமைதியாகி விடாதே ...
இன்னமும் இருக்கிறது நமது இயற்கை அன்னையின் வாழ்க்கை!
இயற்கை அன்னை இழந்தது போதும் இருப்பதைக்காக்க கைகொடு ...
இரு கைகள் போதவில்லை எனில் தோள்களும் கொடு !
இறுமாப்பாய் இன்று எடுப்போம் ஒரு உறுதி மொழி !
இப்புவி காக்க அதுவே இறுதிமொழி!
இயற்கையை பேணுவோம் உயிராய் !
இயற்கையை போற்றுவோம் உணர்வாய் !
இயற்கை சீரழிவை தடுப்போம் கடமையாய் !