JAGAYUVAN

Friday, 15 July 2011

கர்மவீரரே .....

கர்மவீரரே .....
குமாரசாமி-சிவகாமி யின் தவப்புதல்வரே !
விருதுபட்டியின் விடிவிளக்கே !
கல்விசேவையே கடமையனே வாழ்ந்தவரே !
கல்விக்கூடங்கள் பல திறந்து  கண் ஒளியாம் கல்விக்கண் திறந்தவரே !
கண்டங்கள் பல கடந்து கருவிகள் பல நிறுவிட அறிவுக்கண்ணாம் கல்வி ஈந்தவரே !
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உருவாக காரணாமாய் அமைந்தவரே !
கல்வி எட்டாக்கனி ஆகிவிடாது காத்து சாமானியனுக்கும் கல்விக்கனி கிடைக்கச்செயதவரே !
கல்வி காக்க மதிய உணவுத்திட்டம் ஈந்து எளியோரின் கல்விக்கண் திறந்தவரே !
சென்னை IIT (IIT-M)  நிறுவிட துணை நின்றவரே !
சென்னை அனல் மின் நிலையம் (எண்ணூர் ) நிறுவிட காரணாமாய் இருந்தவரே !
திருச்சி பெல் (BHEL) நிறுவனம் அமைந்திட உறுதுணையாய் இருந்தவரே !
பெரம்பூர் ICF, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை (HVF) கண்டவரே !
மேட்டூர் காகித ஆலை நிறுவியவரே !
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் (PAP project) கண்டவரே !
வைகை அணை திறந்தவரே !
கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, மணிமுத்தாறு அணை கண்டவரே !  
சேலம் உருக்காலை நிறுவிட துணை நின்றவரே !
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) நிறுவிட உறுதுணையாய் இருந்தவரே !
மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைத்தவரே !
நம் தாய்த்தமிழகத்தை கல்வித்துறையிலும் தொழில்துறையிலும் முன்னேற்றியவரே !
கிங் maker ஆக உலா வந்து தமிழகத்துப்புகழை  உலகெங்கும் பரப்பியவ்ரே  !
இந்திரா காந்தியை இந்தியாவுக்கு அளித்தவரே ......
தலையான பாரதரத்னா கண்டவரே

ஜூலை 15 ......
இன்று உமது பிறந்த நாள் !
இந்தியத்தமிழர்களாகிய நமது திருநாள் !
இணையத்தில் கூடி மெருகேற்றுவோம் இந்த  இனிய தினத்தை !

இத்தகு தினத்தில் ....
இந்தியர்களாய் நாம் இன்று எடுப்போம் ஒரு உறுதிமொழி !
இந்தியாவை காக்க அதுவே இறுதிமோழி !

இணைவோம் ...
ஊழலுக்கு எதிராய் !
அராஜகத்துக்கு எதிராய் !
வன்முறைக்கு எதிராய் !

வளர்ப்போம்...
தொட்டணைத்தூறும் மணற்கேணியான கல்வியை !

வாழ்க தமிழ்ச்சமுதாயம் !
வளர்க கர்மவீரர் புகழ் !
 
உங்கள் ஜெகயுவன்

Wednesday, 13 July 2011

என்னவளே ..

என்னவளே ..
என்னுயிர் கலந்தவளே ...
என்னுயிர் மூச்சானவளே !
முழு நிலவும் தன் முகம் வெறுத்து மேகத்துனுள் ஒழிந்தது....
 உன் முகத்தை கண்டபொழுது !
கார் முகிலும் உன்னிடம் கையேந்தியது உன் கூந்தலின் நிறத்தை பெற !
பாடு குயிலும்  மௌனமானது உனது குரலை கேட்டு !
ஆடு மயிலும்  தன் கர்வத்தை கைவிட்டது  உன் அழகு கண்டு !
குளத்து மீன்களும் அங்கு வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டன உனது கயல் விழிகளை கண்டு !