JAGAYUVAN

Tuesday, 25 October 2011





தீபத்திருநாள்
திருமகளின் வருகை நாள் !
தீயன அழியும் நாள் !
திகட்டா இன்பம் பெருகும் நாள் !
திவியங்கள் சேரும் நாள் !
திருமகள் திருநடனம் புரியும் நாள் !
திராவிடன் இடையில் தழுவிய நாள் !
தீய நரகாசுரன் நினைவு நாள் !
தீப ஒளியாய் வாழ்வு ஒளிபெறும் நாள் !
தீய எண்ணங்களை தீயிலிடும்  நாள் !
தீப வரிசையாய் வாழ்வில் வசந்தம் பெரும் நாள் !

தீபத்திருநாள் இன்று ..
தீண்ட தீண்ட திகட்டா இன்பம்  பெருகட்டும்...
மனம் மத்தாப்பாய் மலரட்டும் !
மனச்சுமைகள் சங்கு சக்கரமாய் சுழன்று மறையட்டும் !
புதுமைகள் புஷ்ப வானமாய் பூக்கட்டும் !
சங்கடங்கள் சரவெடியாய் சிதறட்டும் !
நண்பர்களே வெடிகளை வெடிக்கும் முன் சற்றே சிந்திப்போம் நமது புவியினை ...
ஓட்டை விழுந்த ஒசோனை (Ozone) அடைக்கமுடியாவிட்டலும் உடைக்காமல் இருக்கட்டும் நமது வான வேடிக்கைகள் !



Saturday, 24 September 2011

துறைமுக நகர்

வழக்கமான  நகரல்ல இது ...
வினோதமான  கொலை நகர்  இது  !
வந்தாரை  வாழ  வைப்பது  தலைநகரம் !
வந்தாரை  சாக  வைப்பது  இத்துறைமுக  நகரம்  !
வாழ்க்கையே  கடல்  மீது  கொண்ட  நகர்  இது ..
வாழ்க்கைக்கே   கடல்  மீது  சமாதி  கட்டும்  நகர்  இது  !
வங்கக்கடலின்  துறைமுக  நகரம்  இது !
வறுமை  வாட்டும் துயர  நகர்  இது  !
வானம்  வரை  மர்மங்கள்  நிறைந்த  நகர்  இது !
வில்லங்கதின் முழு  உரு  நகர்  இது  !
வில்லன்களின்  குத்தகை  பூமி  இது !
விலாங்கு  மீன்களும்  சுறா  மீன்களோடு  மனித  சதை  ருசி  காணும்  நகர்  இது  !
வங்கக்கடலின்   ஆழ்கடலின்  பரப்பும்  மௌனக்கண்ணீர் சிந்தும்  நகர்  இது !
வகைவகையாய் மனித  உயிர்களும்  உடல்களும்  ஜலசமாதி  அடையும்  ஆழ்கடல்  பூமி  இது  !
விசைப்படகுகளின்  விசித்திர   பூமி  இது ...
வியாபாரக்கொலைகளின் பொன்கொழிக்கும்  பூமி  இது  !

மனிதா ...
ஏன் இந்த பண வெறி ???
ஏன் இந்த கொலை வெறி ???
அன்பு  மறந்து ...
மனிதம் தொலைத்து ...
கொலைக்கூலிகளாய்...
கொலைத்தொழில் புரிந்து ...
இறுதியில் கொலையுண்டு .....
போதும் மனிதா போதும்...
இப்பூமி  இரத்தத்தால்  நனைந்தது  போதும் ...
புத்தர்  பிறந்த  இப்பூமி  இனியும்  இரத்த  ஆறு  காண  வேண்டாம் !
பகைமை மறந்து மனிதம் காப்போம் !

Tuesday, 16 August 2011

இந்தியாவும் லோக்பாலும்

இந்தியாவும் லோக்பாலும் 

செல்வச்செழிப்பால்    புகழ்  பெற்றது  அன்று ...
செல்வந்தர்களால்    (கருப்புப்பண ) புகழ்  பெறுகிறது  இன்று !

ஏலம்  கிராம்பு  மிகு தேசம்  என  புகழ்  பெற்றது  அன்று ...
ஏராள  ஊழல்  மிகு  தேசமென  புகழ்  பெறுகிறது  இன்று !

ஆயுர்வேத  தேசமென  புகழ்  பெற்றது  அன்று ...
அற்ப  அரசியல்வாதிகளின்  தேசமென  புகழ்  பெறுகிறது  இன்று !

இமயமலையால்  புகழ் பெற்றது  அன்று !
இமாலய  ஊழல்களால்  புகழ்  பெறுகிறது  இன்று !

புத்தரின்  தேசமென  புகழ்    பெற்றது  அன்று ...
புதுமைமிகு  ஊழல்களின்  தேசமென  புகழ்  பெறுகிறது  இன்று !

பழம்  பெருமைகள்  பேசுவதில்  ஒரு  பலனும்  இல்லை ..
புதுமைகளால்  பெருமை  அடைய  வைக்கும்  நேரம்  இது !


பழம்  பெருச்சாளி  ஊழல்  முனைவர்  அரசியல்வாதிகளுக்கு  சாவுமணி  அடிக்கும்  நேரம்  இது ...
பலமிகுந்த  ஊழலுக்கு  சாவுமணி  அடிக்கும்  லோக்பால்  உருவாகும்  நேரம்  இது !