வழக்கமான நகரல்ல இது ...
வினோதமான கொலை நகர் இது !
வந்தாரை வாழ வைப்பது தலைநகரம் !
வந்தாரை சாக வைப்பது இத்துறைமுக நகரம் !
வாழ்க்கையே கடல் மீது கொண்ட நகர் இது ..
வாழ்க்கைக்கே கடல் மீது சமாதி கட்டும் நகர் இது !
வங்கக்கடலின் துறைமுக நகரம் இது !
வறுமை வாட்டும் துயர நகர் இது !
வானம் வரை மர்மங்கள் நிறைந்த நகர் இது !
வில்லங்கதின் முழு உரு நகர் இது !
வில்லன்களின் குத்தகை பூமி இது !
விலாங்கு மீன்களும் சுறா மீன்களோடு மனித சதை ருசி காணும் நகர் இது !
வங்கக்கடலின் ஆழ்கடலின் பரப்பும் மௌனக்கண்ணீர் சிந்தும் நகர் இது !
வகைவகையாய் மனித உயிர்களும் உடல்களும் ஜலசமாதி அடையும் ஆழ்கடல் பூமி இது !
விசைப்படகுகளின் விசித்திர பூமி இது ...
வியாபாரக்கொலைகளின் பொன்கொழிக்கும் பூமி இது !
மனிதா ...
ஏன் இந்த பண வெறி ???
ஏன் இந்த கொலை வெறி ???
அன்பு மறந்து ...
மனிதம் தொலைத்து ...
கொலைக்கூலிகளாய்...
கொலைத்தொழில் புரிந்து ...
இறுதியில் கொலையுண்டு .....
போதும் மனிதா போதும்...
இப்பூமி இரத்தத்தால் நனைந்தது போதும் ...
புத்தர் பிறந்த இப்பூமி இனியும் இரத்த ஆறு காண வேண்டாம் !
பகைமை மறந்து மனிதம் காப்போம் !

No comments:
Post a Comment