JAGAYUVAN

Thursday, 26 May 2011

          பெண்ணே !
நீ வர...
என் வாழ்வில்
வீசியது வசந்தம் !
ஆயிரம் நினைவுகள் இருக்க
உன்
நினைவு மட்டும் என் நினைவில் நீங்காததாய் !
காலம் தான் நம்மை பிரிப்பினும்
காத்திருப்போம் ...
மீண்டும் சந்திப்போம் ...
என்ற மாறா நம்பிக்கையுடன் ! 

Friday, 20 May 2011

ஏன் யோசிக்கிறாய் பெண்ணே ?


சுவாசிக்க நேரமின்றி உன்னை யாசித்தேன்...
வாசிக்க நேரமின்றி உன்னை பூசித்தேன் ....
பெண்ணே ஆனால் நீயோ ......
என்னை அங்கீகரிகவே யோசிக்கிறாய் ?!

வெற்றி தோல்விகள்

நண்பனே...

வெற்றிபெற்றுவிட்டோமென இறுமாப்பாய் இருந்துவிடாதே ...
தோல்விகள் பாசக்க்கையிறாக உன் கழுத்தை நெறிக்கவும் கூடும் !

வெற்றி பெறவே பிறந்தோம் என வெற்று ஆணவத்தில் திளையாதே...
தோல்விகள் உன் வேகத்தை தடுத்து நிறுத்தவும் கூடும் !

வெற்றி உனது சொத்தென அலட்சியமாய் இராதே...
தோல்விகள் உனது செலவுக்கணக்காக அமையவும் கூடும் !

நட்பெனும் சுவாசம்

நண்பனே !

முதல் மழைத்துளி பெற்ற நிலம்போல
     என் மனம் குளிர்ந்தது.....
நண்பனே உன் வரவு கண்டு !

முதல் ஆதவன் ஒளியைக்கண்ட  சூரியகாந்தியாய்
             என் மனம் மலர்ந்தது....
நண்பனே உன் முகம் கண்டு !

மூச்சடக்கி கடலிலிருந்து பெறப்பட்ட..,
       முத்தினும் உயர்ந்தது....
மூச்சடக்காது பெற்ற உன் நட்பு !

யோசிக்க நாம் மறந்தாலும்...
                நம் நட்பை
சுவாசிப்போம் இறுதிவரை !

ஏன் தமிழா ?

ஏன் ?
மலருக்கும் மணமுண்டு...
இன்றைய மனிதர்களுக்கு மனமுமுண்டா ?
மதியுடையவன் மனிதனாவான் ....
மதியைப்பெற்றும் இன்னும் சதி செய்வதேன் ?
விதி வெல்லும் மதி கொண்டவன்....
கதியற்று விதி செய்யும் சதியில் வீழ்வது ஏன் ?
வலை பின்னும் சிலந்திக்குத் தெரிந்த தன்னம்பிக்கையை ...
மலை போன்ற நீ கைவிட்டதேன் ?
தன் கையினை இழப்பினும் இழக்கக்கூடாத...
தன்நம்பிக்கையினை இழந்ததேன் ?
பூவாசம் மண்வாசம் அறிந்த நீ ...
தாய்ப்பாசம் மறந்ததேன் ?
மனிதம் தொலைக்கும் அணுவை துளைத்து  ஆயுதம் செய்த நீ ...
மனிதம் காக்கும் மனிதநேயம் காக்க மறந்ததேன் ?
அன்னமிட்டு வாழ்ந்த தமிழனே...
உன்னை ஆளாக்கிய அன்னையை மறந்ததேன் ?
வந்தாரை வாழ வைத்த தமிழனே ...
உன்னை வளர்த்துவிட்ட தமிழை மறந்ததேன் ?


நீயும் நானும் வேறல்ல ஓன்று தான்

நண்பனே ,





நீயும் நானும் வேறல்ல ஓன்று தான் …



நட்பு என்ற காற்றை சுவாசிப்பதால் !



நம் இனம் மொழி தேசம் மாறலாம் …



ஆனால் நட்பு என்றும் மாறாது !



காலங்கள் மாறலாம் காட்சிகளும் மாறலாம் ...



ஆனால் நட்பு என்றும் மாறாது !



சுவாச மண்டலமே நின்றாலும் …



நட்பு எனும் சுவாசம் என்றும் நிலைத்திருக்கும் !



வளிமண்டலமே தன் வேலையை நிறுத்தினாலும் …



நட்பு எனும் சுவாச காற்று என்றும் நிலைத்திருக்கும் !




மாயையான மற்ற மதங்கள் மண்டிஇட ….


நம் நட்பு மதம் மட்டும் என்றும் நிலைத்திருக்கட்டும் !

சாதனை

நண்பனே
நேற்று …

முடிந்து போன ஒன்று !

நாளை …

நிச்சயமற்ற ஒன்று !

இன்று …

சாதிக்க என்றே ஒன்று !

இன்று இல்லாவிடில் என்று உள்ளது ????

நம் சாதனை …!!!!!

வானமும் வசப்படும்

நண்பனே

வானமும் உன் வசப்படும்

என எண்ணினாய் ……

வருந்தி உழையாதிருப்பின்

உன் வார்த்தை

கூட உன் வசபடாது !


தொடு வானத்தை தொட்டு விடுவதாய்

கனாக்கண்டாய்…

தொடர்ந்து உழையாதிருப்பின் …

தொடுதூர உன் இலட்சியமும்

உன் வசப்படாது !

தோல்விகள் தொடர்கதையாய்

தொடரினும் துவண்டு விடாதே ….

தொடர்கதைக்கும் ஒரு முற்று புள்ளி உண்டு !

விண்ணும் மண்ணும் உனதாகும்

என எண்ணினாய் …..

உன் கடமையில் விரும்பி ஈடுபடாதிருப்பின்

உன் வீரமும் உனக்கு பாரமாகும் !

புத்தாண்டே வருக

புத்தாண்டே வருக



புத்தாண்டே வருக …

புதுமைகள் பல புரிந்திட !


புதுப்பதாண்டே வருக …


புரட்சிகள் பல எழுந்திட !


புத்தாண்டே வருக …


சோதனைகளை சாதனைகளாக்கிட !


புத்தம் புதிய ஆண்டே வருக …


வேதனைகளை வியபுக்குள்ளாக்கிட !



புத்தாண்டே வருக …


உலகக்கோப்பையை (cricket) நமதாக்கிட !


புது யுகத்தாண்டே வருக ….


பாதுகாப்பு கவுன்சிலில் (UNO) நிரந்திர இடம் கிடைத்திட !


புதுப்பதாண்டே வருக …

சந்திராயனை (Moon mission of ISRO) வெற்றிகரமாக நிறுவிட !



புத்தாண்டே வருக …

தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைந்திட !


புத்தாண்டே வருக …


ஊழலை (corruption) முற்றிலும் ஒழித்திட !

புதுப்புரட்சி ஆண்டே வருக ….

வறுமைக்கோட்டினை (poverty line) முற்றிலும் அகற்றிட !


புதுப்பதாண்டே வருக …


இந்தியா வல்லரசை கண்டிட !

புத்தாண்டு சிறந்திட நாம் எடுப்போம் ஒரு உறுதிமொழி …


வாழுந்துகொண்டிருகும் புவியை (Earth) காக்க அதுவே இறுதிமொழி !

“இயற்கையை ரசிப்போம் உள்ளவரை ”

“இயற்கையை காப்போம் இயன்றவரை ”

நம்பிக்கை

நண்பர்களே …..

நம்பிக்கை எனும் சிறகு கொண்டு

உயர்வோம்

வானம் வரை ……

தவறி விழுந்தாலும்

மீண்டும்

எழுவோம் பியோனிக்ஸ் (Phoenix) பறவையாய் !