JAGAYUVAN

Friday, 20 May 2011

நட்பெனும் சுவாசம்

நண்பனே !

முதல் மழைத்துளி பெற்ற நிலம்போல
     என் மனம் குளிர்ந்தது.....
நண்பனே உன் வரவு கண்டு !

முதல் ஆதவன் ஒளியைக்கண்ட  சூரியகாந்தியாய்
             என் மனம் மலர்ந்தது....
நண்பனே உன் முகம் கண்டு !

மூச்சடக்கி கடலிலிருந்து பெறப்பட்ட..,
       முத்தினும் உயர்ந்தது....
மூச்சடக்காது பெற்ற உன் நட்பு !

யோசிக்க நாம் மறந்தாலும்...
                நம் நட்பை
சுவாசிப்போம் இறுதிவரை !

No comments:

Post a Comment