JAGAYUVAN

Friday, 20 May 2011

வானமும் வசப்படும்

நண்பனே

வானமும் உன் வசப்படும்

என எண்ணினாய் ……

வருந்தி உழையாதிருப்பின்

உன் வார்த்தை

கூட உன் வசபடாது !


தொடு வானத்தை தொட்டு விடுவதாய்

கனாக்கண்டாய்…

தொடர்ந்து உழையாதிருப்பின் …

தொடுதூர உன் இலட்சியமும்

உன் வசப்படாது !

தோல்விகள் தொடர்கதையாய்

தொடரினும் துவண்டு விடாதே ….

தொடர்கதைக்கும் ஒரு முற்று புள்ளி உண்டு !

விண்ணும் மண்ணும் உனதாகும்

என எண்ணினாய் …..

உன் கடமையில் விரும்பி ஈடுபடாதிருப்பின்

உன் வீரமும் உனக்கு பாரமாகும் !

No comments:

Post a Comment