JAGAYUVAN

Friday, 12 August 2011

உரிமை மீட்பு நாள்


  

       
                       உரிமை  மீட்பு  நாள்
இந்தியா ....
இது  தனி  தேசமல்ல ..
பல  தேசங்களின்  தொகுப்பு !
பண்டைய  அவந்தி  முதல்  மகதம்  வரை  பதினாறு  தேசங்களாய் !
இடைக்கால  டெல்லி  சுல்தானியம்  முதல்  டெக்கான்  சுல்தானியம்  வரை  பல  தேசங்களாய் !
காஸ்மீரம் முதல்  திருவாங்கூர்  வரை  572 தேசங்களாய்  !
பலுசிஸ்தான்  முதல்  பர்மா   வரை  மற்றும்  காஸ்மீரம் முதல்  குமரி  முனை  வரை  பதினான்கு  தேசங்களாய் பிரிட்டிஷ்  ராஜ்  என்ற  ஒரு  குடையின்  கீழ் !
இந்தியச்செல்வ  மோகத்தால்  போர்துகீசிய இந்தியா  முதல்   பிரிட்டிஷ்  இந்தியா  வரை ஐந்து  தேசங்களாய்  !
இந்தியச்செல்வ மோகத்தால்  மோதல்கள்  முற்றி  இறுதியில்  பிரெஞ்சு போர்துகீசிய  பிரிட்டிஷ்  இந்தியா  என  மூன்று  தேசங்களாய்  !

நம்முள்  இல்லாத  ஒற்றுமையால்  அன்னியர்  இந்துஸ்தானியத்தை ஆக்கிரமித்து  தமது  வருவாய் ஈட்டும்  தேசமெனே  அடிமைப்படுதினரே    அன்று ..
உரிமையை மீட்க நம்முள் பலரும் சிறுசிறு குழுக்களாய் திரண்டு கலகம் செய்தனரே அன்றி ஒருமித்த கூட்டு எதிர்ப்பு காட்டவில்லையே அன்று
!
தேசப்பற்றற்ற பதர்கள் கைக்கூலிகளாய் மாறி தேசத்தை காட்டிக்கொடுத்தனரே அன்று !

மண்ணின்  வீர மைந்தர்கள்
அந்நிய சக்திகளை இந்துஸ்தானியத்தை விட்டு வேரறுத்து அனுப்ப பாடுபட்டனரே நமது மண்ணின் வீர மைந்தர்கள் !
தென் இந்தியாவை மையம் கொண்டு புரட்சிப்படை உருவானதே அன்று !
நெற்கட்டும்சேவல் புலித்தேவன்  பாஞ்சாலங்குருச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் அவரது இளவல் ஊமைத்துரை !
சினங்கொண்டு சீறிப்போராடிய  சிவகங்கைச்சீமையின்  மருதுபாண்டியர் !
எட்டபனோடு கூட்டுசதி செய்த புல்லுருவி புதுகோட்டை ரகுபதி நம் மண்ணின் மைந்தர்களை காட்டிகொடுத்து தேசத்துரோகி ஆனார்களே அன்று !
பழசி ராஜன் இடைசேன கொங்கனுடன் பரங்கியரை எதிர்த்தனரே அன்று !
திபபு சுல்தான் பீரங்கி மற்றும் ராக்கெட்டுகளுடன் வெள்ளையரை திகைக்கவைத்தாரே அன்று !
திருவாங்கூர் சமஸ்தானம் பழசி திப்புவுடன் இணைந்திருந்தால் பரங்கியரை பந்தாடியிருக்கலாமே அன்றே !
தேசபற்றற்ற பதர்கள் கைக்கூலிகளாய் மாறி தேசத்தை காட்டிக்கொடுத்தனரே அன்று !
தேசபற்றற்ற பதர்கள் கைக்கூலிகளினால் உரிமை இழந்தோம் வாழ்வை இழந்தோமே அன்று  !
பிரிட்டிஷ் காலனியாய் இந்துஸ்தானம் மாறியததால் அதன் பழம் பெருமை இழந்ததே அன்று  !
உரிமை மீட்பு
காலனி அவலத்திலிருந்து விடுபட உருவானதே இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் !
A O ஹும் தாதாபாய் நௌரோஜி மூலமாய் மோகன்தாஸ் கரம்சந் காந்தியினால் உரிமை மீட்பு சாத்தியமானதே !
காந்தியின் ஒத்துழையாமை முதல் வெள்ளையனே வெளியேறு வரை இயக்கங்கள் வெள்ளையரை விரட்ட வழி வகுத்ததே !
வேலூர் கலகம் முதல் வடஇந்திய சிப்பாய்க்கழகம் வரை எதிர்ப்புகள் பலமாய் பதியபட்டனவே  !
நேதாஜியின் ஆசாத்  ஹிந்த்  பாஜ்  (INA) ஆங்கிலேயரை கிலி கொள்ளசெய்ததே !
பகத் சிங் மங்கள் பாண்டே வீர வாஞ்சி திருப்பூர் குமரன் வீரத்தியாகங்கள் செய்து உரிமை மீட்க பாடுபட்டனரே !
மங்கையர் குலமும் சளைத்ததல்ல எனும்படி லட்சுமி பாய் மங்கம்மாள் வேலு நாச்சியார் என வீர போர்க்களம் கண்டனரே !
சரோஜினி நாயுடு முத்துலட்சுமி ரெட்டி அன்னிபெசன்ட் என இயக்கங்கள் மூலம் எதிர்ப்பு காட்டினரே நமது மங்கையர் குலம் !
தண்ணீர் விட்டா வளர்த்தோம் செங்குருதி அல்லவா இட்டு வளர்த்தோமே நமது உரிமைமீட்பு பயிரை !
15 -08 -2011
64 வது உரிமை மீட்பு நாள் இது !
அரும்பாடுபட்டு மீட்ட நமது உரிமையை அரசியல்வாதிகளிடம் பறிகொடுத்து விட்டோமே இன்று !
செல்வச்செழிப்பால் புகழ் பெற்ற நம் அன்னை பாரதம் ஊழல் செழிப்பால் புகழ் பெற்றதே இன்று !
ஹவாலா போபர்ஸ் மாட்டு தீவன ஆதர்ஷ் காமன் வெல்த் (Common wealth) உச்சமாய் 2G என வகை வகையாய் இன்று !
ஊழல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் என ஊழல் நாடாய் மாறியதே இன்று !
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த ஊழல் மயமான இந்துஸ்தானியயத்தை காணும்போது இன்று !
கொலை வாளினை எடடா இந்த கொடியோர் செயல் அரவே--லோக்பால் எனும் சட்டம் மூலம்

போற்றுவோம் உரிமை மீட்பை !
காப்போம் அதன் பெருமைதனை !