JAGAYUVAN

Friday, 5 August 2011

நண்பர்கள் தினம்

நண்பர்கள்  தினம் 
நட்பு
நயம்பட்ட நாகரிகத்தின்  உச்சம்  நட்பு !
உடுக்கை இழந்தவன்  கைபோல்  இடுக்கண்  களைவது  நட்பு !
மழைதுளியிலிருந்து சிப்பியின்  மூலம்  உருவாகும்  முத்து நட்பு !
இவ்வுலகின்  இயக்கத்தை  ஒருங்கிணைக்கும்  பிரம்ம  முடிச்சு  நட்பு !
நம்முள்  ஜீவனாய் இருந்து  நம்மை  வழிநடத்தும்  உயிர்மூச்சு  நட்பு !

நட்பின் இலக்கணம்
தமிழ்ப்புலமை  மூலம்  நட்பு  கொண்டவர்கள்  பாரியும்  கபிலரும்  !
காணாது நட்பு  கொண்டவர்கள்  கோப்பெரும் சோழனும்  பிசிராந்தையாரும் !
நெல்லிகனியால்  நட்பை  உணர்த்தியவர்கள்  அதியனும்  அவ்வையும் !
நண்பனின்  உயிர்  காத்து நட்பை  உணர்த்தியவர்கள்  குமணனும்  பெரும்சிதிரனாரும் !
உரிமை மீட்க நட்பு பூண்டவர்கள் பழசி ராஜனும் இடைசேனை கொங்கனும் !
இங்கு  சிறந்த  நட்பின்  இலக்கணமாய் மறைந்தும்  வாழ்கிறார்கள் இன்று !
அத்தகு உயர் நட்பின் தாயகம் நம் தாய்த்தமிழகம் ...
உயர் நட்பு இலக்கண பூமி நம் தாய்த்தமிழகம் ....
தரணியில் சிறந்த உயர் நட்பை போற்றும் மக்கள் நம் தமிழ் மக்கள்  !

நண்பனே
நட்பின் வாரம் இது !
நம்பிக்கையின் சாரம் இது !
நல் எண்ணங்களுடன் படைப்போம் புது உலகம் !
நனிசிறந்த நண்பர்களின் புதுமை உலகம் !


நட்பினை சுவாசிப்போம் உயர்மூச்சாய் !
நட்பினை போற்றுவோம் கற்பாய் !

No comments:

Post a Comment