JAGAYUVAN

Friday, 20 May 2011

ஏன் தமிழா ?

ஏன் ?
மலருக்கும் மணமுண்டு...
இன்றைய மனிதர்களுக்கு மனமுமுண்டா ?
மதியுடையவன் மனிதனாவான் ....
மதியைப்பெற்றும் இன்னும் சதி செய்வதேன் ?
விதி வெல்லும் மதி கொண்டவன்....
கதியற்று விதி செய்யும் சதியில் வீழ்வது ஏன் ?
வலை பின்னும் சிலந்திக்குத் தெரிந்த தன்னம்பிக்கையை ...
மலை போன்ற நீ கைவிட்டதேன் ?
தன் கையினை இழப்பினும் இழக்கக்கூடாத...
தன்நம்பிக்கையினை இழந்ததேன் ?
பூவாசம் மண்வாசம் அறிந்த நீ ...
தாய்ப்பாசம் மறந்ததேன் ?
மனிதம் தொலைக்கும் அணுவை துளைத்து  ஆயுதம் செய்த நீ ...
மனிதம் காக்கும் மனிதநேயம் காக்க மறந்ததேன் ?
அன்னமிட்டு வாழ்ந்த தமிழனே...
உன்னை ஆளாக்கிய அன்னையை மறந்ததேன் ?
வந்தாரை வாழ வைத்த தமிழனே ...
உன்னை வளர்த்துவிட்ட தமிழை மறந்ததேன் ?


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. its great but probably using headings as madhi or arivu last eight lines are not required in this poem

    ReplyDelete